வீடு புகுந்து ரூ.1¼ லட்சம் தங்க நகைகள் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தரிகெரே அருகே வீடு புகுந்து ரூ.1¼ லட்சம் தங்க நகைகள் திருடிய மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.

Update: 2022-06-22 15:37 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கரகுந்தே தாண்டியா கிராமத்தை சேர்ந்தவர் கமலாநாயக். விவசாயி. இவர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் ஓட்டை பிரித்து இறங்கிய மர்மநபர்கள், பீரோவில் இருந்த 44 கிராம் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர்.


இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து திரும்பி வந்த கமலாநாயக் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பீரோவில் இருந்த தங்க நகைள் திருடுபோய் இருந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.


உடனே அவர் இதுகுறித்து தரிகெரே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். திருடப்பட்ட நகைகளில் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்