ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்
சிவமொக்கா: சிவமொக்கா (மாவட்டம்) டவுன் புத்தநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஷத் கான்(வயது 24). இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவரது பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சிவமொக்காவில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஹர்ஷத் கானை போலீசார் தேடிவந்தனர். இன்று காலையில் சிவமொக்கா புறநகர் அனுபினஹட்டி பகுதியில் ஹர்ஷத் கான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு ஹர்ஷத் கான் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து துங்காநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஹர்ஷத் காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.