சாலை பள்ளத்தை கற்களால் நிரப்பிய பள்ளி மாணவன்

சாலை பள்ளத்தை கற்களால் நிரப்பிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது.

Update: 2022-08-19 21:21 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கங்கனாடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவரது மகன் முகமது அரகான். இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகமது அரகான், பள்ளிக்கு செல்லும்போது பூ மார்க்கெட் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதை கவனித்தான்.

இதையடுத்து அவன், அங்கு சாலையோரம் கிடந்த சிறிய, சிறிய கற்களை எடுத்து அந்த சாலை பள்ளத்தில் நிரப்பினான். இதனை அந்தப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவனின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்