மைசூரு அருகே சாலை விபத்து 10 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
மைசூரில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கொள்ளேகாலலிருந்து வந்து கொண்டிருந்த இனோவா கார் பலமாக மோதி கார் அப்பள போல் நொறுங்கி உள்ளது. இதனால் காருக்குள் இருந்த குழந்தைகள் பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்., இன்னும் இரண்டு பேர் நரசிபுரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆனது.
காரில் இருந்த மரணம் அடைந்தவர்கள் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மைசூர் பக்கம் சுற்றுலா வந்து மாதேஸ்வரன் மலை சென்று விட்டு திரும்பு வந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கொள்ளேகால தீமரீஸ் புறா நெடுஞ்சாலை குறுபூறு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. அவர்களது பெயர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை தெரியவில்லை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் திருமகூடலூ-நரசிபுரா அருகே காரும் தனியார் பஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.