செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; வரலாறு படைத்த கேரளா
கேரளாவில் செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி வரலாறு படைக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும், பொது செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும் ஒதுக்கீடு செய்யப்படும். செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.
அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு இந்த அரசு சிறந்த பணியாற்றி வருகிறது என தெரிவித்த ஜார்ஜ், அதன் தொடர்ச்சியாக, சுகாதார பிரிவிலும் திருநங்கை சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.