இறைச்சிக்காக காரில் கடத்திய 5 பசுமாடுகள் மீட்பு

பெல்தங்கடியில் இறைச்சிக்காக காரில் கடத்திய 5 பசுமாடுகள் மீட்கப்பட்டதுடன், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-04 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட படககாரந்தூர் பகுதியில் வேனூர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் மனிதாபிமானமற்ற வகையில் 5 பசுமாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும், காருக்கு முன்பாக ஸ்கூட்டரில் பாதுகாப்புக்காக சென்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கராயா கிராமத்தை சேர்ந்த டோசிப் (வயது 32), புத்தூரை சேர்ந்த உஸ்மான் (55), இக்பால் (34), இர்பான் (25), ஷானாஸ் (23) என்பதும், அவர்கள் இறைச்சிக்காக பசுமாடுகளை கொடூரமான முறையில் காரில் அடைத்து வைத்து கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பசுமாடுகளை மீட்ட போலீசார், அதனை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். கைதானவர்களிடம் இருந்து கார், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வேனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்