ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து பொருட்கள் வெளியேற்றம்

டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து பொருட்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

Update: 2023-04-22 10:29 GMT

புதுடெல்லி,

வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், குஜராத்தின் சூரத் கோர்ட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி கடந்த 14-ந்தேதி காலி செய்தார்.

இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்த மேஜை, நாற்காலிகள், அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இன்று வாகனங்களில் வெளியேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்