மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
உப்பள்ளி:-
மத்திய மந்திரி
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கன மழையால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக பருவ மழையால் அதிகளவு மகசூல் பாதித்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தகவல் கிடைத்தது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தினேன். மத்திய அரசு அனுப்பி வைத்த இடைக்கால நிதி வந்தடைந்ததாக கலெக்டர் கூறியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக 63 ஆயிரத்து 609 பேருக்கு ரூ.57 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதி உடனே விடுவிக்கப்பட்டு இருக்கிறது.
நிவாரண தொகை
இதற்கு முன் விண்ணப்பித்த விவசாயிகளின் ஆவணங்கள் அனைத்தும் சரிசெய்யப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்படும். அரசின் இந்த நிவாரணத்தொகையை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.