மீட்டர் பயன்படுத்த மறுப்பு; ஆட்டோ டிரைவருக்கு அபராதம்
மீட்டர் பயன்படுத்த மறுப்பு; ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் பயணிகள் போல் வாடகை ஆட்டோக்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டர் போட மறுத்ததுடன் கே.ஆர்.புரத்தில் இருந்து பீனிக்ஸ் சிட்டி வரை பயணிப்பதற்கு ரூ.150 கட்டணம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவருக்கு ரூ.150 அபராதம் விதித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களை கே.ஆர்.புரம் போலீசார் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.