பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பெங்களூரூவுக்கு கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-15 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு ஜாலஹள்ளி மேற்கு மண்டல வனப்பிரிவு போலீசாருக்கு சரக்கு ஆட்டோ மூலம் பெங்களூருவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வனப்பிரிவு போலீசார் ஜாலஹள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் டிரைவர் ஆட்டோவை திருப்ப முயன்றார். இதனை கவனித்த போலீசார் விரைந்து சென்று ஆட்டோவை மடக்கினர். பின்னர் ஆட்டோவில் சோதனை செய்தபோது செம்மரக்கட்டைகள் இருந்தன.

இதுகுறித்து ஆட்டோவில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் 4 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததை 4 பேரும் ஒப்புக்கொண்டனர். இதனால் 4 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 527 கிலோ செம்மரக்கட்டைகள், ஒரு சரக்கு ஆட்டோ, 2 வாள்களை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேர் மீதும் வனப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்