மத்திய அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு..!

2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 30, 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2022-05-20 11:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக (Dividend amount) ரூ. 30 ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்குவது நடைமுறையான ஒன்று.

இந்த ஈவுத்தொகை என்பது, ரிசர்வ் வங்கி சந்தை நடவடிக்கைகள், முதலீடுகள், பணம் அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதிலிருந்து கிடைக்கிற உபரித்தொகை அல்லது லாபம் இவற்றிலிருந்து மத்திய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கும்.

இந்த அடிப்படையில் கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ. 30 ஆயிரத்து 307 கோடி ரூபாய் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதேபோல் 2020-2021 ம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக சுமார் ரூ. 99 ஆயிரத்து 122 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டை காட்டிலும் தற்போது ஈவுத்தொகை குறைவு என்றாலும் இந்த முக்கிய நடவடிக்கையானது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்