ரேசன் கடை உரிமையாளர்கள் நாளை போராட்டம்

ரேசன் கடை உரிமையாளர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: கர்நாடக மாநில ரேசன் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணப்பா, பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறோம். ஆனால் கே.ஆர்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் ரேசன் கடைகளுக்குள் புகுந்து ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் ரேசன் கடை உரிமையாளர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். துமகூருவில் 10 ஆயிரம் பேர் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்