சித்தாந்தங்களுக்கு தனி இடம் உண்டு, ஆனால் நாடு தான் முதன்மையானது - பிரதமர் மோடி பேச்சு

நாடு மற்றும் சமூகம் தான் முதன்மையானது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

Update: 2022-07-25 16:26 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

மறைந்த கல்வியாளர், சமூக சேவகர், மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு நாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் நலன்களை விடஅரசியல் அமைப்புகளின் சித்தாந்தங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் பேசுகையில், "சித்தாந்தங்களுக்கு தனி இடம் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், நாடு மற்றும் சமூகம் தான் முதன்மையானது. எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தாத திட்டங்களை நாங்கள் செயல்படுத்தும் போது தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

ஒரு கட்சியையோ, ஒரு நபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிரான குரலாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும்" என தெரிவித்தார். இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய தினம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்