கணவரை விடுவிக்க உதவுகிறேன் என கூறி பலாத்காரம், ரூ.5 லட்சம் லஞ்சம்; இன்ஸ்பெக்டரின் அராஜகம்

அரியானாவில் கணவரை விடுவிக்க உதவுகிறேன் என கூறி ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்று, பெண்ணை பலாத்காரமும் செய்த இன்ஸ்பெக்டரின் அராஜகம் தெரிய வந்து உள்ளது.

Update: 2022-11-22 16:58 GMT



சண்டிகர்,


அரியானாவின் பல்வால் பகுதியில் குடியிருந்து வரும் பெண்ணின் கணவர் சிலருடன் ஏற்பட்ட தகராறில் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் நீம்கா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வெளியே கொண்டு வர அவரது மனைவி முயன்றுள்ளார். இதற்காக குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ஒருவரை அந்த பெண் அணுகியுள்ளார்.

ஆனால், சிறையில் இருந்து கணவரை விடுவிக்க உதவுகிறேன் என கூறி அந்த இன்ஸ்பெக்டர் பெண்ணை பலாத்காரம் செய்து உள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்பு ரூ.4 லட்சம், பின்னர் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியுள்ளார்.

அரசு ஊழியரான, பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பெக்டரின் அராஜகம் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், இதுபற்றி பதிலளிக்கும்படி, அரியானா அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த விசயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் தற்போதுள்ள நிலவரம் பற்றிய அறிக்கையை 6 வாரங்களில் சமர்ப்பிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்