மோடி வருகைக்கு போட்ட சாலை பெயர்ந்தது

பெங்களூருவில் மோடி வருகைக்காக போடப்பட்ட சாலை பெயர்ந்தது.

Update: 2022-11-15 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2-வது முனையம், 108 அடி உயர கெம்பேகவுடா சிலை ஆகியவற்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த 11-ந் தேதி பெங்களூருவுக்கு வந்தார். அவரது வருகையையொட்டி விமான நிலைய விரைவு சாலை, பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலை என பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டன.

அவரது வருகையால் சகலட்டி பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அந்த சாலையில் போடப்பட்டுள்ள தார், ஜல்லி கற்கள் பெயர்ந்து போக ஆரம்பித்துள்ளன. இந்த சாலையால் கடந்த சில நாட்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர். மோசமான சாலையை போட்டதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் மீது அந்த பகுதியி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்