புதிய போலீஸ் கமிஷனராக ரமணகுப்தா பதவி ஏற்றார்
உப்பள்ளி-தார்வார் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ரமணகுப்தா பதவி ஏற்றார்
உப்பள்ளி:-
உப்பள்ளி-தார்வார் இரட்டை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் லாபுராம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசு பணி இடமாற்றம் செய்தது. அப்போது, லாபுராம் ஐ.ஜி.யாக பணி உயர்வு பெற்று இடமாற்றம் ெசய்யப்பட்டார். மேலும் உப்பள்ளி-தார்வார் மாநகர போலீஸ் கமிஷனராக ரமணகுப்தா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட ரமணகுப்தா, நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது பதவியை ஏற்று கொண்டார். அவரிடம் லாபுராம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். உயர் போலீஸ் அதிகாரிகள், கமிஷனர் அலுவலக ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.