தொடர் அமளி: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை மேலும் 2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-02-07 07:24 GMT

புதுடெல்லி,

தொடர்ந்து பங்கு சந்தையில் சரிவை சந்தித்து வரும் அதானி குழும பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பதாகவும், அதே போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி, அது குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

இந்த அமளியானது பட்ஜெட் தாக்கல் செய்த மறுநாள் ஆரம்பித்து இன்று நான்காவது நாள் வரை நீடித்து வருகிறது. நேற்று வரை 3 நாள் நாடாளுமன்ற இரு அவைகளும், எதிர்க்கட்சியினர் அமளியால் முடங்கியது. அதனால் இன்று காலை மூத்த மத்திய அமைச்சர்கள் எதிர்கட்சியினரிடம் பேசி நாடாளுமன்றத்தில் சுமூகமான விவாதத்தை நடத்த கேட்டுக்கொண்டனர் என தகவல் வெளியாகி இருந்தது.

இருந்தும், நாடாளுமன்றம் நான்காவது நாளாக தொடங்கியது முதல், எதிர்கட்சியினர் அதானி குழும விவகாரத்தை எழுப்பியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனை அடுத்து மதியம் 12 மணி வரையில் நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, 12 மணிக்கு இரு அவைகளும் கூடிய நிலையில், மாநிலங்களவையில் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை கூட்டத்தை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்