ராஜஸ்தானில் ராகுல்காந்தியை வரவேற்று போஸ்டர் வைப்பதில் அசோக் கெலாட்-சச்சின் பைலட் கோஷ்டி இடையே மோதல்!

பாரத் ஜோடோ யாத்திரை இன்று ராஜஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பே, காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

Update: 2022-12-04 08:13 GMT

ஜெய்ப்பூர்,

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று மாலை ராஜஸ்தானுக்குள் நுழைகிறது.

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தானுக்கு வருவதற்கு முன்பே, ராஜஸ்தானில் இரு காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு இடையே போஸ்டர் போர் வெடித்தது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. சச்சின் பைலட் முதல்வர் ஆவதைத் தடுக்க, கட்சியின் தேசியத் தலைவராகும் வாய்ப்பையும் கெலாட் கைவிட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை வரவேற்று சச்சின் பைலட் ஒட்டிய அதே போஸ்டர்களில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பெயர் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஆதரவாளர்கள் ஒட்டினர். இந்த சம்பவம் ஜலாவர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இதனையடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் செயலுக்கு சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுவரொட்டிகளுக்கு அதிக பணம் செலவழித்து, முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகளை வாடகைக்கு வைக்க எடுத்துவிட்டு, தற்போது எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் தங்கள் போஸ்டர்களில் ஒட்டுவதா என சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த மாதம் 29-ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராஜஸ்தான் சென்று கெலாட் - சச்சின் இடையே சமரசம் செய்து வைத்தார். இரு தலைவர்களுடன் கைகுலுக்கி பேசிய அவர், மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது என்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மீண்டும் ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்