ராஜஸ்தான்; மினி பஸ்-லோடு ஆட்டோ மோதி விபத்து... ஒருவர் பலி; பலர் படுகாயம்

மினி பஸ் மற்றும் லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2023-08-07 07:03 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மினி பஸ் மற்றும் லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. அதனால் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பார்மர் மாவட்ட துணை காவல் ஆய்வாளர் கூறுகையில், 'விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் கன்பத் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்