பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரிப்பு

பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2023-02-02 18:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட தற்போதைய வருவாய் 73 சதவீதம் அதிகரித்து உள்ளது.

முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு 6,181 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகி உள்ளது. முன்பதிவு பயணிகள் பிரிவில் வருவாய் ரூ.42,945 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48 சதவீதம் அதிகம் ஆகும்.

முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை சுமார் 45,180 லட்சமாகும். கடந்த ஆண்டு இது 19,785 லட்சமாக இருந்தது. வருவாயைப் பொறுத்தவரை ரூ.11,788 கோடி கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,555 கோடிதான் கிடைத்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முன்பதிவு அல்லாத பிரிவில் 4 மடங்குக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்