ரெயிலில் ஜன்னல் ஓரம் இருந்த பயணியின் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ரெயிலின் ஜன்னால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு இரும்பு கம்பி உள்ளே பாய்ந்தது.

Update: 2022-12-03 18:07 GMT

லக்னோ,

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகருக்கு செல்லும் நீலச்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று ஹரிகேஷ் துபே என்ற பயணி பயணித்தார். அவர் ரெயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தார்.

இதனிடையே, காலை 8.45 மணியளவில் ரெயில் உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டம் சோம்னா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ரெயில் ஜன்னால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு இரும்பு கம்பி ரெயிலுக்குள் பாய்ந்தது. அந்த கம்பி ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ஹரிகேஷின் கழுத்தில் பாய்ந்தது. இந்த கோர சம்பவத்தில் ஹரிகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது எதிர்பாரத விதமாக கம்மியை உடைத்துக்கொண்டு இரும்பு கம்பி பாய்ந்ததில் ஜன்னல் ஓரம் இருந்த பயணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பயணி ஹரிகேஷ் துபேவின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று வடக்கு-மத்திய ரெயில்வே இன்று அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்