ஒடிசா விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை
ஒடிசா விபத்து தொடர்பாக தென்கிழக்கு பிராந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்திரி விசாரணை மேற்கொண்டுள்ளார் .
பாலசோர்,
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி விபத்துக்குள்ளாயின. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஒடிசா விபத்து தொடர்பாக தென்கிழக்கு பிராந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்திரி விசாரணை மேற்கொண்டுள்ளார் .
மேலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரெயில்களை இயக்கியவர்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.