கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடந்தே செல்வார் - மூத்த தலைவர்கள் அறிவிப்பு

பாதயாத்திரையின் போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடந்தே செல்வார் என்று மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2022-08-29 22:23 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை அடுத்த மாதம் (செப்டம்பர்) காங்கிரஸ் கட்சி தொடங்குகிறது. கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யாத்திரை தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த யாத்திரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரையாக செல்வாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், 'நிச்சயமாக. மொத்த தொலைவுக்கும் அவர் நடந்தே செல்வார்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்