ராகுலுக்கு 2 ஆண்டு சிறை: எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க சட்டமா? ப.சிதம்பரம் ஆவேசம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சு பற்றிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
வலுவான அரசியல் பேச்சுதான் ஜனநாயகத்தின் சாராம்சம் ஆகும். எனவே ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை வாயடைத்துப்போகச் செய்யும் வகையில் சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது. ஜனநாயகக் குரல்களின் துயர் நிலை பற்றி அமைதியாக சுயபரிசோதனை செய்வதன்மூலம், சட்டத்தின் வலிமையை சத்தம் போட்டு பாராட்டுவது தணிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.