ராகுல் காந்தி ஷூவில் கயிறுகளே கிடையாது; புகைப்படத்துடன் பா.ஜ.க.வுக்கு பதிலளித்த காங்கிரஸ்

ராகுல் காந்தி ஷூவில் கட்டுவதற்கு கயிறுகளே கிடையாது என புகைப்படத்துடன் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் பதிலளித்து உள்ளது.

Update: 2022-12-21 17:33 GMT


புதுடெல்லி,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டியது.

இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியான பன்வார் ஜிதேந்திரா சிங் என்பவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்றார். அவர் வழியில், ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை கட்டி விடுவதற்காக குனிந்தது போன்ற வீடியோ வெளிவந்தது. அதில், ராகுல் காந்தியும் அவரது முதுகில் தட்டி கொடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவை பா.ஜ.க.வின் அமித் மாளவியா பதிவிட்டு, ராகுல் காந்தியின் ஷூ கயிற்றை முன்னாள் மத்திய மந்திரி பன்வார் ஜிதேந்திரா சிங் ஓடி சென்று முட்டி போட்டு கட்டி விடுகிறார்.

ஆணவம் பிடித்த அந்த குழந்தை உதவுவதற்கு பதிலாக, அவரது முதுகில் தட்டி கொடுக்கிறார் என காட்டமுடன் பதிவிட்டு உள்ளார். அவரது இந்த பதிவை அக்கட்சியின் பிற உறுப்பினர்களான தஜீந்தர் பாகா, யோகி பலக்நாத், ரோகித் சஹால், ஹர்ஷ் சதுர்வேதி, ரமேஷ் நாயுடு நகோத்து உள்ளிட்ட மற்றவர்களும் டேக் செய்து டுவிட்டரை பகிர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநாதே டுவிட்டரில் இன்று, ராகுல் காந்தி ஷூவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் கயிறுகளே கிடையாது என தெரிவித்து உள்ளார். காங்கிரசின் மற்றொரு தலைவர், ராகுல் காந்தி ஷூவின் கயிறுகளை கட்டுவதற்காக குனியவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து சுப்ரியா, போலியான செய்தியை பரப்பும் அமித் மாளவியா அவர்களே, ராகுல் காந்தி ஷூவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். அதில் கயிறுகளே கிடையாது!!

நீங்கள் பொய் கூறியதற்காக மீண்டுமொரு முறை பிடிபட்டு உள்ளீர்கள். ஆனாலும், இன்னும் நீங்கள் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடியால் ஒவ்வொரு நாளும் பொய் கூற அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் 3 பேரும் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கோரவேண்டும். பொய் கூறுவது நிறுத்தப்பட வேண்டும் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்