அன்பு முடிவில்லாதது, விலைமதிப்பற்றது: பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-28 10:44 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குஜராத் மாநிலம் காந்திநகரின் ரைசன் பகுதியில் வசித்துவரும் தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்து, குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஆசி பெற்றார்.

பின்னர், குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து ஓட்டளித்து சென்றார்.இந்த நிலையில் ஹீரா பென் ஆமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹீரா பென்னின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.தாயாரின் நலம் விசாரிக்க பிரதமர் மோடி குஜராத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்