பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: ஜனாதிபதி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Update: 2023-09-17 05:00 GMT

டெல்லி,

பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்