கேரள எல்லையில் இன்று முதல் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

தமிழகத்தில் ராகுல் காந்தியில் நடைபயணம் நேற்றுடன் முடிவடைந்தது.

Update: 2022-09-11 02:39 GMT

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நேற்று 4வது நாள் நடைபயணம் முடிவடைந்தது. இதனால் தமிழகத்தில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார் பின்னர் பேசிய அவர் மக்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கவே இந்த நடைபயணம் என்றும், தமிழக மக்களிடம் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு என்றும் கூறினார்.

இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார் . 

Tags:    

மேலும் செய்திகள்