இம்மாத இறுதியில் ராகுல்காந்தி அமெரிக்கா பயணம் என தகவல்
வரும் 31-ம் தேதி காங். முன்னாள் எம்.பி., ராகுல்காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதுடெல்லி,
வரும் 31-ம் தேதி காங். முன்னாள் எம்.பி., ராகுல்காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக வெளியான செய்தியில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காங்., முன்னாள் எம்.பி.ராகுல்காந்தி வரும் 31-ம்|தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஸ்டேன்போர்டு பல்கலை,, ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். கலிபோர்னியா, வாஷிங்டன் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ராகுல், ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.