பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக பாஜக நடத்துகிறது: ராகுல் காந்தி தாக்கு

பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக பாஜக நடத்துகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2022-09-27 16:21 GMT

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயதே ஆன இளம் பெண் அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி கூறியதாவது;- பாஜக சித்தாந்தத்தின் உண்மை இதுதான். பெண்களை எப்போதுமே இரண்டாம் தர குடிமக்களாகவே பாஜக நடத்துகிறது. அதிகாரத்தை தவிர வேறு எதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை" என்றார்.

உத்தரகாண்ட் பாஜகவின் முக்கிய தலைவரின் மகனான புல்கித் ஆர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் அங்கிதாவை, அவர் பணியாற்றிய சொகுசு விடுதிக்கு வரும் விருந்தினர்களின் ஆசைக்கு இணைங்க வற்புறுத்தியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்