போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது..? - ராகுல்காந்தி கேள்வி

பிரதமர் மோடிக்கு அதானியுடன் என்ன உறவு? அதானியின் போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார்.

Update: 2023-04-02 23:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், பிரதமர் மோடிக்கு கேள்வி விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மிஸ்டர் பிரதமர், உங்களிடம் நான் ஒரு கேள்வி எழுப்பி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதற்கு நீங்கள் இன்னமும் பதில் அளிக்கவில்லை. அதனால் மறுபடியும் கேட்கிறேன்.

அதானிக்கு சொந்தமான போலி கம்பெனிகளில் போடப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்?

என்ன உறவு?

எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள மக்கள் பணம், அதானிக்கு ஏன் கொடுக்கப்பட்டது?

உங்களுக்கு அதானியுடன் என்ன உறவு என்று நாட்டுக்கு உண்மையை சொல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்