நீட் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ;
மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ கோரிக்கை விடுத்தோம். தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க வலியுறுத்தினோம்.
நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் மத்திய மந்திரியிடம் நேரில் கோரிக்கை வைத்தோம்.கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்கக் கோரினோம். நீட் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகள் மீது தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையை தெரிவித்தோம் . என கூறினார்.