முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய வாலிபர் கைது

முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-27 22:09 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் குடாச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொகுதி எம்.எல்.ஏ. ராஜீவ், சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை மறித்த கிராமத்தினர், சாலை பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறினர். அப்போது வாலிபர் ஒருவர், சாலை பணிகள் முறைகேட்டில் உங்கள் பங்கு எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. ராஜீவ் உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு, வாலிபரை கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு கிராம மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்