பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வலா சுட்டுக்கொலை
பஞ்சாப் அரசு நேற்று பாதுகாப்பை திரும்பப் பெற்ற நிலையில், இன்று சித்து மூஸ்வலா மர்ம நபரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
புதுடெல்லி,
பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வலாக் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்று நடவடிக்கை எடுத்தது. இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.