பஞ்சாப்: பெட்ரோல் பங்கில் பணம் பறிக்க முயன்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவலாளி
பஞ்சாப்பில் பெட்ரோல் பங்கில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளை கும்பலை நோக்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
பஞ்சாப்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜந்தியாலா குருவுக்கு அருகிலுள்ள மல்லியன் கிராமத்தில் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த பெட்ரோல் நிலையத்திற்கு திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அங்கே பணியில் இருந்த காவலாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதில் பணம் பறிக்க முயன்ற ஒருவர் உயிரிழந்தார்.
இதை பார்த்து மற்றொருவர் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.