பஞ்சாப்; 360 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கண்டெடுப்பு
பஞ்சாபில் 360 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டத்தில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் காவல் துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தர்ன் தரன் மாவட்டத்தின் ராஜோக் கிராமத்தில் ஒரு வயல் வெளியில் ஒரு மஞ்சள் நிற பொட்டலத்தை கண்டெடுத்தனர். அதை திறந்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் 360 கிராம் அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வாரத்தில் இது 2-வது சம்பவம். முன்னதாக இந்த வார தொடக்கத்தில் திங்கள் கிழமை இது போன்று ஒரு போதைபொருள் கடத்தல் சம்பவத்தை எல்லை பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையினர் இணைந்து முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.