புனித்ராஜ் குமார் கந்ததகுடி திரைப்படத்தையொட்டி இலவச முடித்திருத்தம்
புனித்ராஜ் குமார் கந்ததகுடி திரைப்படத்தையொட்டி இலவசமாக முடித்திருத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துமகூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் கடைசியாக 'கந்ததகுடி' என்ற ஆவணப்படத்தில் நடத்திருந்தார். அந்த படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், கந்ததகுடி சினிமா இன்று வெளியாவதையொட்டி, துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா கே.ஜி.டெம்பிள் கிராமத்தில் வசிக்கும் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான பவன் தனது முடித்திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்தார்.
அதாவது கடந்த 25-ந் தேதி மற்றும் 26-ந் தேதி (நேற்று முன்தினம்) ஆகிய 2 நாட்கள் தனது கடைக்கு முடித்திருத்தம் செய்ய வந்த வாடிக்கையாளர்களிடம் பணம் எதுவும் பெறாமல் இலவசமாக பவன் முடித்திருத்தம் செய்திருந்தார். அவரின் இந்த செயலுக்கு புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள். புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் என்பதால், அவர் கடைசியாக நடித்த கந்ததகுடி சினிமா வெளியாவதால் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்ததாக பவன் தெரிவித்துள்ளார்.