ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து

ஜனாதிபதியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-26 03:21 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக புதுச்சேரி வர இருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்துகொள்வதற்காக ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வர இருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் வெளிநாடு பயணம் காரணமாக மற்றொரு தேதியில் புதுச்சேரிக்கு வருகை தருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்