பி.யூ.சி. மாணவன் மாரடைப்பால் சாவு

பி.யூ. கல்லூரிக்கு மாணவன் கல்லூரிக்கு புறப்பட்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-10 18:45 GMT

மங்களூரு:-

தனியார் பள்ளி

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் சுமார் 5-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு மாரடைப்பு என்பது 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் தான் வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் கிருஷ்ணாபுரா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவரது 2-வது மகன் முகமது ஹாசிம் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பி.யூ.கல்லூரியில் படித்து வந்தான்.

வழக்கம்போல்

தினமும் அவனை, அப்துல் ரகுமான் தான் பள்ளிக்கு கொண்டுபோய் விடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் முகமது ஹாசிம் கல்லூரிக்கு புறப்பட்டான். அப்போது வீட்டில் திடீரென அவன் மயங்கி விழுந்தான்.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள தனியார்

ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவன் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறினார்.

குடகில்...

மகன் இறந்த செய்திகேட்டு, குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அவர்கள் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 8-ந் தேதி தான் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த கீர்த்தன் என்ற 12 வயது சிறுவன், வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்