யானைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்த பொதுநல வழக்கு:

யானைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-01 20:53 GMT

பெங்களூரு-

கர்நாடகத்தில் விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்துவிடாமல் இருக்க மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வேலிகளில் சிக்கி கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட யானைகள் செத்தன. இதுகுறித்து ஆய்வில் தெரியவந்தது. இந்த நிலையில் மின்கம்பிகளால் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க கோரியும், அதற்கு வழிமுறைகளை வகுக்க கோரியும் அன்குஷ் என்னேமஜால் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், யானைகள் பாதுகாப்பு குறித்து உயர்மட்ட குழு அமைத்து சட்டங்கள் வகுக்க கோரினார். அந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அவற்றை தடுக்க புதிய சட்டங்கள் அவசியம் தான். எனவே யானைகள் உயிரிழப்பு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு நோட்டீசு வழங்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்