லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

லாரி - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-07-29 21:19 GMT

ஹாசன்: ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா அருகே நாகய்யனகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் துஷ்யந்த்(வயது 16). இவரது நண்பர் ஸ்ரீகண்டாநகரைச் சேர்ந்த குஷால்(16). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்களது இன்னொரு நண்பனை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.


மோட்டார் சைக்கிளை துஷ்யந்த் ஓட்டினார். குஷால் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் சரவணபெலகோலா புறநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் குறித்து சரவணபெலகோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்