விளைநிலங்களில் மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் போராட்டம்; போலீசாருடன் தள்ளுமுள்ளு

கடூர் தாலுகாவில், விளைநிலங்களில் மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-20 18:45 GMT

சிக்கமகளூரு:

கடூர் தாலுகாவில், விளைநிலங்களில் மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்கம்பம்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா திம்மலாபுரா கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதை கடூரில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து கடூரில் உள்ள துணை மின் நிலையத்துக்கு மின்சாரத்தை கொண்டு செல்ல மின்சார துறையினர் விளைநிலங்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்கள் அமைத்து வருகிறார்கள்.

இதற்கு விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் விவசாய நிலத்தில் மின்கம்பம் அமைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது விவசாயி ராஜப்பா மற்றும் சிலர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. அனைவரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

அதனால் அங்கு மின்கம்பம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து மீண்டும் மின்கம்பங்கள் அமைக்கும் பணியை தொடர மின்சார வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கடூர் தாலுகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்