மசாஜ் சென்டரில் விபசாரம்; 8 இளம்பெண்கள் மீட்பு
மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு சதாசிவநகர் 13-வது கிராசில் உள்ள மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் மசாஜ் சென்டருக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து தாய்லாந்தை சேர்ந்த 7 இளம்பெண்கள், பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் விட்டனர்.
மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மசாஜ் சென்டரின் உரிமத்தை ரத்து செய்யும்படி மாநகராட்சி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.