தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை

விஜயாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-08-12 21:23 GMT

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் ஜலநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட குருபாதேஷ்வராநகரில் வசித்து வந்தவர் பரசுராம் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். பரசுராம் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டது. இதனை அறிந்த பரசுராம், சண்டையை விலக்கி விடுவதற்காக சென்று சமாதானமாக பேசினார்.

அப்போது பெண்ணின் குடும்பத்தினர் பரசுராமை அங்கிருந்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் பரசுராம், அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பரசுராமை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்