தனியார் பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்

பத்ராவதி அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-08-07 15:36 GMT

சிவமொக்கா;

தனியார் பஸ் கவிழ்ந்தது

சிவமொக்கா நகரில் இருந்து சித்ரதுர்கா நோக்கி நேற்றுமுன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. சிவமொக்கா பழைய ெரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் மாற்று வழியாக சிவமொக்கா-ஹொளலூர்-சன்னியாசி கோட மக்கி வழியாக பஸ் சென்று கொண்டிருந்து.

ஹொளலூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று பஸ் மீது மோதுவதுபோல் வந்துள்ளது. இதனால் டிரைவர், பஸ்சை ஒருபக்கமாக திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

20 பேர் படுகாயம்

இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா, ஒலேஒன்னூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்