பா.ஜ.க.வின் அனைத்து மேயர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை
பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களும் பங்கேற்க கூடிய கூட்டம் ஒன்றில் நாளை (செப்டம்பர் 20-ந்தேதி) காலை 10.30 மணியளவில் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.
இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாக்கல் சூழலில், நவீன மற்றும் வருங்காலம் சார்ந்த நகரங்களை கட்டமைப்பது மிக அவசியம்.
இதற்கான பணியை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மேற்கொள்வதற்கும் மற்றும் அதற்கான ஒரு வாய்ப்பாக இதனை நாம் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.