பிரதமர் மோடி விரைவில் கர்நாடகம் வருகை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை திறக்க பிரதமர் மோடி விரைவில் கர்நாடகம் வருகை தர உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2022-12-30 22:02 GMT

பெங்களூரு:

மண்டியாவில் நடைபெற்ற பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாக மூடியே இருந்தது. அதை திறக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ஆலையை தனியாருக்கு விற்குமாறு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நான் அதை நிராகரித்துவிட்டு அந்த ஆலையை அரசே நடத்த உத்தரவிட்டேன். அதை நடத்த தேவையான நிதியை ஒதுக்கினேன். அதன் பலனாக இன்று அந்த ஆலையில் கரும்பு அரவை பணி நடக்கிறது. இதன் மூலம் மண்டியா விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம்.

இரட்டை என்ஜின் அரசால் பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி அரசின் மகிமை. இந்த விரைவு சாலையை திறக்க பிரதமர் மோடி விரைவில் கர்நாடகம் வரவுள்ளார். இந்த சாலை திறக்கப்பட்டால், பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 1½ மணி நேரத்தில் சென்றடைய முடியும். கர்நாடகத்தில் முன்பு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் அதிக ஊழல்களை செய்தனர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சமூகநீதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து சமூகங்களுக்கும் உரிய நீதியை நிலைநாட்ட நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்