போலீஸ்காரர்கள் போல் நடித்து தனியார் வங்கி ஊழியரிடம் தங்கநகைகள் 'அபேஸ்'

சித்ரதுர்காவில், போலீஸ்காரர்கள் போல் நடித்து தனியார் வங்கி ஊழியரிடம் தங்கநகைகள் ‘அபேஸ்' செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-15 18:45 GMT

சிக்கமகளூரு;

போலீஸ்காரர்கள் போல் நடித்து...

சித்ரதுர்கா மாவட்டம் நாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவர், தனியார் வங்கிக்கு பணம் வசூல் செய்து கொடுக்கும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணம் வசூல் செய்துவிட்டு வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ம்றறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபாகரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறி இங்கு திருட்டு சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. உங்கள் நகை, பணத்தை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் திருடர்கள் பறித்து ெசன்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபாகரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி, காகிதத்தில் வைத்துகொடுத்து அனுப்பியுள்ளனர்.

தங்கநகைகள் பறிப்பு

சிறிது தூரம் சென்ற பிரபாகர், அவர்கள் வழங்கிய காகிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. அப்போது தான் பிரபாகருக்கு, மர்மநபர்கள் 2 பேர் போலீஸ்காரர்கள் போல் நடித்து தங்கநகைகளை பறித்ததை உணர்ந்தார். அந்த தங்கநகைகளின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபாகர் அளித்த புகாரின் பேரில் நாயக்கனஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்