கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த மங்களகரமான தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து சக குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ண பகவானின் வாழ்க்கையும், போதனைகளும் நல்வாழ்வு மற்றும் நல்லொழுக்கத்தை உள்ளடக்கியது. அவர் "சுயநலமில்லாத கடமை " என்ற கருத்தை பரப்பினார். 'தர்ம' வழியின் மூலம் இறுதி நிலையை அடைவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த ஜென்மாஷ்டமி பண்டிகை நம் எண்ணம், வார்த்தைகள் மற்றும் செயல்பாடு நல்லொழுக்க பாதையில் செல்ல நம்மை ஊக்குவிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.