2 நாள் பயணமாக சிக்கிம் சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு சென்றடைந்தார்.
காங்டாக்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு சென்றடைந்தார்.
சிக்கிம் மாநிலத்திற்கு முதல் முறையாக செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்திற்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை, அம்மாநில கவர்னர் கங்கா பிரசாத், முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
மனன் கேந்திராவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி முர்மு, பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.